நாட்டில் மேலும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் நேற்றையதினம் 72 ஆயிரத்து 177 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய 24 ஆயிரத்து 324 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 866 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேநேரம், 790 பேருக்கு அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் 451 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேவேளை ஆயிரத்து 301 பேருக்கு மொடெர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும்  செலுத்தப்பட்டது.

12 ஆயிரத்து 341 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 104 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

Leave a Reply