மிரிஹான கலவரம்: பெண் உட்பட 45 பேர் கைது

கொழும்பு, ஏப்ரல் 1

மிரிஹான பிரதேசத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோதலின் போது ஒரு பொலீஸ் பஸ், 1 பொலீஸ் ஜீப், 2 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு தண்ணீர் பீரங்கி லாரி சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் போது 17 பொதுமக்கள், 17 பாதுகாப்பு படையினர் மற்றும் 3 பத்திரிகையாளர்கள் உட்பட 35 பேர் காயமடைந்தனர்.

Leave a Reply