இன்று சு.கவின் விசேட மத்திய குழுக் கூட்டம்

கொழும்பு, ஏப் 01

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (சு.க) விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நிலைமை, மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பிரசார செயலாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்விசேட கலந்துரையாடல் ஒன்று  நேற்று பிற்பகல்  இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் காரியாலயத்தில் வைத்து இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply