
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைத் தமிழர்கள் சிலர் தமிழகத்துக்கு புகலிடம் கோரிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.





