யாழில் வெடிக்கும் போராட்டம் – சிவாஜிலிங்கம் அழைப்பு

நாட்டில் தமிழ் மக்கள் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்கள் இடம்பெற்று வருகிறது என்பதை சர்வதேசம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கெ சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகை தந்த போது, பெண்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தினர். இது எமக்கு புதிதல்ல. ஆனாலும் இதை இப்படியே தொடர விடக்கூடாது. சர்வதேசம் இது பற்றி நன்கு அறியும்.

நாட்டில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு ஆகிய சமூகங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன, அமைதி நிலவுகிறது என சர்வதேசத்திடம் இலங்கை அரசு கூறி வருகிறது.

ஆனால் சர்வதேசம் இப்போது புரிந்துகொள்ளும். அத்துடன் நாளை மறுதினம் காலை 10 மணிக்கு மாபெரும் போராட்டம் யாழில் இடம்பெறவுள்ளது. அதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.

Leave a Reply