உதயன் இனி 40 ரூபா!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பத்திரிகைக்கான காகிதாதிகள், அச்சுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே நீடித்துக் கொண்டிருக்கும் இந்த நெருக்கடிகளைத் தாங்கியவாறே “உதயன்” வெளிவந்துகொண்டிருக்கிறான்.

ஆயினும் இந்த நெருக்கடிகள் தீர்வின்றித் தொடரும் நிலையில், எமது இயலுமை நிலையையும் தாண்டிய இந்த அசாதாரண நிலையைச் சமாளிப்பதற்காக விலையில் சிறிய அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு “உதயன்” ஆளாகியிருக்கின்றான்.

01.04.2022 (இன்று) முதல் உதயன் நாளிதழின் விலையை 40 ரூபாவாகவும், உதயன் வார இதழின் (சஞ்சீவி உதயன்) விலையை 50 ரூபாவாகவும் நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது.

பல்வேறு நெருக்கடிகள் சூழ்ந்த காலத்தில் “உதயனுக்கு” பக்கபலமாக நின்ற வாசகர்கள், தற்போதைய நெருக்கடி நிலைமையை உணர்ந்து தோளோடு தோள் நிற்பார்கள் என்று “உதயன்” நம்புகின்றான்.

இந்த விலை மாற்றத்தை பொறுத்தருளி, இதுவரை காலமும் வழங்கிய உங்கள் ஆதரவை தொடர்ந்தும் வழங்குவீர்கள் என்று அன்புரிமையோடு “உதயன்” எதிர்பார்க்கின்றான்.

Leave a Reply