
கொழும்பு, ஏப்ரல் 1: இறக்குமதி, ஏற்றுமதி போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் அந்த சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள கூறுகையில் “நாட்டில் டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், 75 சதவீத ஊர்திகள் சேவையில் இருந்து விலகியுள்ளன. இந்த நிலையால் ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி கொள்கலன்களை கப்பலேற்றம் செய்வதற்கு உரிய நேரத்தில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்று அவர் தெரிவித்தார்.





