
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் சரமாரி கேள்விகளுக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளித்து வருகிறார்.
இதன்போது ஊடகவியலாளரொருவர், குறித்த முற்றுகை போராட்டம் நடத்தப்பட்ட போது ஜனாதிபதி எங்கிருந்தார் என கேள்வியெழுப்பினார்.
இதற்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, போராட்டம் நடந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வீட்டிற்குள்ளேயே இருந்ததாக குறிப்பிட்டார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹானையிலுள்ள வீட்டிற்கு முன்பாக நேற்றிரவு என்ன நடந்தது என்பது தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான ஊடக சந்திப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.
“உண்மை” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்க தரப்பினர் இது குறித்து விளக்கமளிக்கவுள்ளனர். இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





