
இலங்கைக் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சுப் பதவியை பெறுவதற்கு அன்று தொடக்கம் இன்று வரை முயற்ச்சி செய்கின்றனர் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் கூட்டமைப்பு என்ற கட்சிக்குள், ஈ.பி.ஆர்.எல்.எப். உட்பட பல கட்சிகள் அங்கம் வகித்தன. அதன் பின்னர் வெளியேறவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கும் காரணம். இதைவிட நேற்று சுமந்திரன் கூறி இருக்கின்றார்.
கூட்டமைப்பில் இருந்து ரெலோ வெளியேறுவது பிரச்சினை இல்லை என்று. ஆனால் மக்களுக்காக நிற்காமல், எந்த அரசு வந்தாலும் அவர்களுடன் தமிழரசுக் கட்சி முண்டு கொடுத்து நிற்க ஆரம்பித்ததன் காரணமாகவே பங்காளிக்கட்சிகள் அன்று வெளியேறின.
கூட்டமைப்புக்குள் இடையில் வந்து புகுந்தவர்கள் தான் தமிழரசுக் கட்சியினர்.கூட்டமைப்புடன் ஆரம்பித்தில் இருந்த கட்சிதான் ரெலோ. ஆனால் இன்று அரசின் அமைச்சுப் பதவிகளை பெறவும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவிகளை பெறுவதற்கும் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் விருப்புகின்றனர்.- என்றார்.





