மிரிஹானவில் கைதானவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது என அறிவிப்பு!

<!–

மிரிஹானவில் கைதானவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படாது என அறிவிப்பு! – Athavan News

மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது விசேட அதிரடிப்படையினர் 18 பேர் உட்பட 24 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 53 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைதானவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply