
நேற்றையதினம்(31) மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படாது என சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் இந்த சம்பவத்தினால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





