
தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்கள் அரசின் பங்காளிகளாக இருந்துகொண்டு மலையக தோட்டத்தொழிலாளர்களை நசுக்கி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்ததுள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்:
22 தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களும் அரசாங்கத்தின் மடியினிலே இருக்கிறார்கள்.
இந்த அரசாங்கத்துக்கு பொறுப்புக் கூறுபவர்களாகவும் ஆலோசனை கூறுபவர்களாகவும் இவர்களே காணப்படுகிறார்கள். எனவே எந்த சாக்கு போக்கும் கூற முடியாது. இவர்கள் தொழில் சங்க உரிமைகளை மீறி நடக்கின்றனர்.
இந்த செயற்பாட்டினை பாராளுமனறத்திற்கும் தொழில் அமைச்சருக்கும் எழுத்து முகமாக தெரிவித்திருக்கின்றோம். கிட்டத்தட்ட 1 இலட்சம் 53 ஆயிரம் தொழிலாளர்களை நம்பி, 15 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களை அரசு பந்தாடுகிறது.
நேற்றைய தினம் ஜனாதிபதி மாளிகை முன்பாக இடம்பெற்ற போராட்டத்திலே மக்களை கட்டுப்படுத்த முடியாமல் சென்றதைப் போலவே, மலையக மக்களும் தள்ளப்படுவார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது.- என்றார்.





