கைதுசெய்யப்பட்டவர்களுக்கு சட்டஉதவி வழங்க 300 சட்டத்தரணிகள் களமிறக்கம்.

மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் நேற்றிரவு(31) இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் நடைபெற்ற அசம்பாவிதங்களின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக 300 சட்டத்தரணிகள் இலவசமாக சட்ட உதவி வழங்க தயாராகி வருகின்றனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்களுக்கெதிராக பயங்கரவாதச் தடைச் சட்டத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்படமாட்டாது எனவும் தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என இன்றைய ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply