ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைதானவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்!

<!–

ஜனாதிபதியின் வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைதானவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள 300 சட்டத்தரணிகள்! – Athavan News

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பாக அதிகளவான சட்டத்தரணிகள் மிரிஹான பொலிஸ் நிலையத்தில்  ஆஜராகியுள்ளனர்.

சுமார் 300 இற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இவ்வாறு ஆஜராகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் தமது சேவைகளை இலவசமாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


Leave a Reply