IMF அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

கொழும்பு, ஏப் 01

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பான அறிக்கையினை அண்மையில் முன்வைத்திருந்தது.  இது, குறித்த நாடாளுமன்ற விவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கோரியிருந்தார்.

அதற்கு ஆளும் கட்சி சார்பில், இணக்கம் வெளியிடப்பட்டிருந்ததுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply