
நாளை (ஏப்ரல் 2) நாடுமுழுவதும் அனைத்து பகுதிகளிலும் 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் 3 கட்டங்களாக சுழற்சிமுறை மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சுழற்சிமுறையில் 8 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது.





