
நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இதுவரை பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16, 479 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், மேலும் 16 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637,256 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், 7, 896 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





