
கொழும்பு, ஏப் 1
நாட்டு மக்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் FR மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மின் உற்பத்திக்கான எரிபொருளை மின்சார சபைக்கு தொடர்ந்து வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

