சனிக்கிழமையும் இருளில் மூழ்கும் இலங்கை

கொழும்பு, ஏப் 1

நாட்டில் நாளைய தினம் 8 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் F வரையான வலயங்களிலும், G முதல் L வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் S வரையான வலயங்களிலும், T முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு 8 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply