மொரட்டுவ மேயர் இல்ல பகுதியில் பரபரப்பு! விசேட அதிரடிப்படை வரவழைப்பு

மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லம் அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்பாட்டம் காரணமாக இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தின் போது மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவின் இல்லத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பதற்ற நிலையைத் தணிப்பதற்காக விசேட அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply