இந்தியாவின் முதற்கட்ட இறக்குமதி அரிசி, வரும் வாரம் முதல் இலங்கைக்கு

கொழும்பு, ஏப் 1

அடுத்தவாரம் இந்தியாவின் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் முதலாவது கட்ட அரிசித் தொகை நாட்டை வந்தடையவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் 40,000 மெற்றிக் டன் அளவான நாடு, சம்பா, வெள்ளை அரிசி ஆகிய அரிசி வகைகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.

அவற்றை உடனடியாக மக்களுக்கு சலுகை விலையில், விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Leave a Reply