அஜித் நிவாட்…

அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த நியமனம் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அவர் அன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர் இதற்கு முன்னர் அமைச்சின் செயலாளராகவும், மத்திய வங்கியின் ஆளுநராக சுமார் 09 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

Leave a Reply