தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­களே அதி­க­ள­வில் சாவு!- வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர்!

தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­களே அதி­க­ள­வில் சாவு
30 வய­தைக் கடந்த ஒரு லட்­சம் பேர் தடுப்­பூசி பெற­வில்லை
வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் தெரி­விப்பு!

வடக்கு மாகா­ணத்­தில் கொரோ­னாத் தொற்­றுக் கார­ண­மாக இது­வரை 578 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். அவர்­க­ளில், கடந்த ஓகஸ்ட் மாதம் 228 பேரும், இந்த மாதம் முதல் 12 நாள்­க­ளில் 169 பேரும் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இவ்­வாறு உயி­ரி­ழந்­த­ வர்­க­ளில் அநே­க­மா­னோர் எந்­த­வொரு தடுப்­பூ­சி­யை­யும் பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­களே தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­வ­தன் மூல­மாக கொரோ­னாத் தொற்று ஏற்­பட்­டா­லும் அதன் தாக்­கத்­தை­யும், உயி­ரி­ழப்­பை­யும் தவிர்க்­கவோ, குறைக்கவோ கூ­டி­ய­தாக இருக்­கும். எனவே அனை­வ­ரும் தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­ளுங்­கள்.
இவ்­வாறு வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளார், வடக்கு மாகாண சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் மருத்­து­வர் ஆ.கேதீஸ்­வ­ரன்.

இது தொடர்­பில் அவர் அனுப்­பிய செய்­திக் குறிப்­பில்,
வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான கொரோ­னாத் தடுப்­பூசி ஏற்­றும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளில் 5 லட்­சத்து 47 ஆயி­ரத்து 150 பேருக்கு முத­லா­வது தடுப்­பூசி வழங்­கப்­பட்­டுள்­ளது. இது வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளில் 85 வீத­மா­கும்.
2ஆவது தடுப்­பூசி 4 லட்­சத்து ஆயி­ரத்து 494 பேருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. இது 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளில் 62 வீத­மா­கும்.
வடக்கு மாகா­ணத்­தில் 30 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளில் சுமார் ஒரு லட்­சம் பேர் இது­வரை எந்­த­வொரு தடுப்­பூ­சி­யும் பெற்­றுக்­கொள்­ள­வில்லை.

தொற்­றா­ளர் தொகை
கடந்த ஓகஸ்ட் மாதம் நடுப்­ப­குதி தொடக்­கம் வடக்கு மாகா­ணத்­தில் கொரோ­னாத் தொற்­றா­ளர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் இறப்­பு­க­ளின் எண்­ணிக்­கை­யும் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளது. வடக்கு மாகா­ணத்­தில் இது­வரை மொத்­த­மாக 32ஆயி­ரத்து 844 தொற்­றா­ளர்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளார்­கள். இவர்­க­ளில் 14 ஆயி­ரத்து 480 தொற்­றா­ளர்­கள் கடந்த ஓகஸ்ட் மாதத்­தி­லும் 5 ஆயி­ரத்து 847 தொற்­றா­ளர்­கள் செப்­ரெம்­பர் மாதத்­தின் முதல் 12 நாள்­க­ளி­லும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர்.

தடுப்­பூ­சி­யைத் தவ­ற­வி­டா­தீர்!
எனவே தற்­போது ஏற்­பட்­டுள்ள இந்த அபா­ய­க­ர­மான பெருந்­தொற்­றுச் சூழ­லிலே உயி­ரி­ழப்­பு­க­ளைக் குறைப்­ப­தற்கு எம்­மி­ட­முள்ள முக்­கி­ய­மான உபா­யம் தடுப்­பூ­சியைப் பெற்­றுக்­கொள்­வதே. எனவே, இது­வரை தடுப்­பூசி பெற்­றுக்­கொள்­ளா­த­வர்­கள் அனை­வ­ரை­யும் உட­ன­டி­யா­கச்­சென்று தடுப்­பூ­சி­யைப் பெற்­றுக்­கொள்­ளு­மாறு வின­ய­மா­கக் கேட்­டுக்­கொள்­கின்­றோம். – என்­றுள்­ளது.

Leave a Reply