இன்று இதுவரையில் 2,473 பேருக்கு கொரோனா தொற்று!

Covid-19 coronavirus vaccine Close up hands of scientist show Covid-19 vaccine name sputnik-v in glass vial with virus background Hands of doctor wear latex glove holding Covid-19 vaccine in bottle

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 845 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

முன்னதாக இன்று 1,628 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து473 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 490,955 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 354 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 415,649 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply