புத்தளத்தில் 7000 பேர் இதுவரை முதல் டோஸ் ஏற்றப்படவில்லை

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட 7000 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசி இதுவரையிலும் ஏற்றப்படவில்லையென புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதன்போது முதல் டோஸ் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு நாளை காலை (16) காலை 8. மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலை மற்றும் புத்தளம் இந்து மத்தியக் கல்லூரி ஆகிய இடங்களில் (Pfizer) தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது.

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் இராணுவத்தினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட 39000 பேருக்கு கொவிட் தடுப்பூசி முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *