தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாகிஸ்தான் இரட்டை வேடமிடுவதாகத் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதைப் பொருத்து அந்நாட்டுடனான உறவைத் துண்டிப்பது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும் என்றும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தலிபான் அமைச்சரவையில் ஹக்கானி தீவிரவாதிகளை இடம்பெறச் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும் பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார்.

காபூலில் தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து,  தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படும் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply