உயர்தர, புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்

கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரம் மற்றும் புலமை பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால எல்லையை மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீடிக்குமாறு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லையினை நீடிப்பது தொடர்பில் இன்று (15) தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கு அதிபர்களுக்கு இன்று வரை காலவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விண்ணப்பங்கள் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நியைிலேயே மேலும் ஓரிரு வாரங்கள் நீடிக்கும் படி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் பரீட்சைகளை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply