இன்றைய மின்வெட்டு

கொழும்பு, ஏப் 11

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய நீர் மற்றும் எரிபொருள் இல்லாத காரணத்தினால் இலங்கையில் இன்றும் நாளையும் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

‘A’ முதல் ‘W’ வரையிலான 20 வலயங்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை  2 மணி 15 நிமிடங்களும் மாலை 05.30 மணி முதல் இரவு 10.45 மணி வரை ஒரு மணி நேரம் 45 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply