காலி – மாத்தறை பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி உயிரிழந்து பாதையில் வீழ்ந்து கிடந்ததாக ஹபரதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் வந்துரம்ப மாபொட்டுவன மாகெரவத்தை, பகுதியில் வசிக்கும் 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர், அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பாதுகாவலராக பணிபுரிந்து வருவதாகவும், இதய நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைக்காக சடலம் கராப்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ஹபரதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






