நெத்தலி ஆற்றுப் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில், 40 லீற்றர் கசிப்பினை பொலிசார் மீட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இருவரும், இரவு காவல் கடமையிலிடுபட்ட பொலிசாரின் வீதி சோதனையில் சிக்கியுள்ளனர்.
இதன்போது, இவர்களிடம் இருந்து 40 லீட்டர் கசிப்பு மற்றும் எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.







