நகைக்கடை கொள்ளை: CCTV உதவியுடன் திருடன் கைது (VIDEO)

அனுராதபுரம், ஏப் 26

அனுராதபுரம், தலாவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் 2.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நகைக் கடையின் பின்பக்க கதவுக்குள் புகுந்த திருடன் தங்கம், வெள்ளி மற்றும் இரத்தினக் கற்களை திருடிச் சென்றிருந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் பதிவாகியிருந்தன.

எவ்வாறாயினும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில், இரகசிய முகவர் ஒருவரைப் பயன்படுத்தி பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இருவரை தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் இன்று (26) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

[embedded content]

Leave a Reply