கண்ணிவெடி அகற்றும் பகுதியை அமெரிக்க தூதுவர் பார்வையிட்டார்!

முகமாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பகுதியை நேரில் பார்வையிட அமெரிக்க தூதுவர் ஜூலிசங் நேற்றுபயணம் மேற்கொண்டார்.

அமெரிக்க கொடையாளர்களின் நிதியுதவியில் டாஸ் நிறுவனத்தால்  இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்  கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை  தூதுவர் பார்வையிட்டதுடன், கள ஆய்வை மேற்கொண்டு பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் குறித்த பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருள்களையும் பார்வையிட்டார். மேலும் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுத்துவரும் ஊழியர்களை தூதுவர் பாராட்டியதுடன் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.

குறித்த பயணத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகள், டாஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply