ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு அறிவுறுத்தல்!

கோத்தபாய ராஜபக்ச மற்றும்  மஹிந்த ராஜபக்ச ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான உரிமை ஆகியவற்றை பாதுகாப்பது போலவே, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போதுமான பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ளஅறிக்கை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply