இலங்கை அரசியலில் மாற்றம் நிகழுமா? நாளை முக்கிய தீர்மானம்  

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாற்பது பேரும் நாளைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதனை சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நாளை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply