சிங்கங்கள் இருக்கும் இடத்தில் கர்ச்சனைகள் இருக்கும் – பொன்சேகாவுடனான மோதல் குறித்து ஹரின்

மே தினக் கூட்டத்தில் நேற்று இடம்பெற்ற வாய்த் தகராறு குறித்து ஹரின் பெர்னாண்டோவை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாக சாடியுள்ளார்.

பேரணியில் பேசுபவர்களின் பட்டியலை தான் அவரிடம் கோரிய நிலையில் ஹரின் பெர்னாண்டோ இவ்வாறு நடந்துகொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

சுதந்திர சதுக்கத்தில் பேரணியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பை ஹரின் பெர்னாண்டோ மேற்கொண்டதாக சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சில நபர்களின் செல்வாக்கை அதிகரிப்பதற்காக ஹரின் பெர்னாண்டோ, பேரணியைப் பயன்படுத்தியதாக சரத் பொன்சேகா குற்றம் சாட்டினார்.

இதேவேளை குறித்த மோதல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ, சிங்கங்கள் இருக்கும் இடத்தில் கர்ச்சனைகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *