ராஜபக்சவினரின் பழைய கணக்கைத் தீர்க்க துடிக்கிறார் சரத் பொன்சேகா! விக்கி எம்.பி

ராஜபக்சவினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னர் சிறையில் அடைத்தனர். இப்பொழுது அவர் தம் பழைய கணக்கைத் தீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பதவியில் இருந்து ராஜபக்ச குடும்பத்தவர் பிரிந்தால் அவர்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாவார்கள்.

ராஜபக்சவினர் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை முன்னர் சிறையில் அடைத்தனர். இப்பொழுது அவர் தம் பழைய கணக்கைத் தீர்க்க காத்துக் கொண்டிருக்கின்றார்.

ராஜபக்சவினர் நாட்டை விட்டு ஓடிவிட முடியாதவாறு சகல நடவடிக்கைகளையும் எதிர்க் கட்சியினர் எடுத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் தம் பதவிகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

அது நிச்சயம் மற்றவர்களுக்கு அவர்கள் ஏற்படுத்திய இன்னல்களுக்கு அவலத்திற்கும் அவர்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே நியதி என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *