ஹர்த்தாலுக்கு ஆதரவு – சேவையிலிருந்து விலகும் புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு

எதிர்வரும் 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவாக 05 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அதன்படி, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், புகையிரத அதிபர்கள் சங்கம், லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர் ஒன்றியம், புகையிரத ஊழியர் சங்கம், புகையிரத தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் உள்ளிட்ட 40இற்கும் மேற்பட்ட புகையிரத தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக புகையிரத வர்த்தக பொதுச் செயலாளர் எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

அனைத்து ஊழியர்களும் பணியை விட்டு வெளியேறி வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அரசாங்கம் பதிலளிக்காவிட்டால், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் விதானகே மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *