பிக்கு மாணவர்களினால் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் போராட்டம்

கொழும்பு,மே 03

ஜனாதிபதியை பதவிவிலக கோரி அனைத்து பல்கலைகழக பிக்கு மாணவர்களினால் ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கபட்டது.

விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த போராட்டம் ஆரம்பமாகி இருந்தது.

உலக வர்த்தக மையத்திற்கு அருகே அமைந்துள்ள பொலிஸ் வீதித் தடையை அகற்றி முன்னோக்கி நகர்ந்த பேரணி மத்திய வங்கிக்கு அருகாமையில் இருந்த வீதித் தடையையும் அகற்றி ஜனாதிபதி மாளிகையை நெருங்கினர்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழகங்க பிக்குகள் சம்மேளனம், பின்னர் காலி முகத்திடல் போராட்ட பூமிக்கு பேரணியாக சென்றது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இவ்வாறானதொரு குழுவினர் போராட்டம் நடத்துவது இதுவே முதலாவதாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply