போர்க்காலத்தில் வாழ்ந்தது போல நமது வாழ்க்கையை கொண்டமைக்க வேண்டும்! மாவை எடுத்துரைப்பு

போர்க்காலத்தில் எவ்வாறு வாழ்ந்தோமோ அப்படி நம் வாழ்க்கையை கொண்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ;

இந்த அரசாங்கம் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் ஆதரவாக இருக்கின்றோம்.

போர் காலத்தில் தமக்கு தேவையான உணவுகளை தாமே உற்பத்திசெய்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது மிக மோசடியான ஒரு நிலைமைக்கு ஆளாகி வருகின்றனர்.

அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கத்தை தாங்கிக்கொண்டு இருக்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார திட்டத்தை முன்வைக்காமல் வரியை அதிகரித்தால் தற்போதைய நிலையை விட அதிகரிக்கும் நிலை உள்ளது.

காஸ் , எண்ணெய்வகை , உணவுப்பண்டங்களை பணம் கொடுத்து வாங்க முடியாத நிலையில் நாம் உள்ளோம் .
.
இந்த பொருளாதாரத்தை நிவர்த்தி செய்வதற்கு இன்னோர் நாட்டின் உதவியுடன் மீட்டு எடுக்க வேண்டும்.

இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்கு பின் பொருளாதார நெருக்கடியானது இன்னும் மோசமான நிலைக்கு போகும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இதனால் வேளாண்மையை ஊக்கப்படுத்தி நாம் போர் காலத்தில் எவ்வாறு வாழ்ந்தோமோ அப்படி நம் வாழ்க்கையை கொண்டமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் உணவுப்பற்றாக்குறையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

முக்கியமாக ஊட்டச்சத்து இன்மையால் அவஸ்தைப்படுகின்றனர்.

இதைவிட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர் .இவற்றில் அரசாங்கம் முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும் என்றார்.

Leave a Reply