பதற்ற நிலையில் பாராளுமன்ற வளாகம்!(படங்கள் இணைப்பு)

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றையதினம் மொரட்டுவ மற்றும் கொழும்பு பல்கலைக்கழக மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றுவருகின்றது.

இதேவேளை சற்றுமுன் இவ் ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தை அடைந்துள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதித் தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளளது.

இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் வீதித் தடைகளை மீறி உட்பிரவேசித்ததை அடுத்து அங்கு பதற்றநிலை உருவாகியது.

இதனால் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் தற்போது பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியதுடன் கடும் வாக்குவாதங்களும் இடம்பெற்றுவருகின்றது.

இதேவேளை தற்போது நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply