நீதிமன்ற உத்தரவுக்கமைய வாகனங்கள் அகற்றம்

கொழும்பு,மே 04

நீதிமன்ற உத்தரவுக்கமைய, அலரிமாளிகை முன்பாக உள்ள நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் மற்றும் பாரஊர்திகள் அகற்றப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறாக அலரிமாளிகைக்கு முன்பாக உள்ள வாகனங்கள் மற்றும் அனைத்து உடைமைகளையும் அகற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உரிய உத்தரவு தடையல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொலிஸார் இந்த வாகனங்களை அகற்றுவதற்கு புதன்கிழமை மாலை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply