இந்தியாவிலிருந்து நாட்டை வந்தடைந்த அடுத்த எரிபொருள் கப்பல்

கொழும்பு,மே 04

இந்தியாவிலிருந்து மேலும் 40 ஆயிரம்  மெட்ரிக் டொன் எரிபொருள் நாட்டை வந்தடைந்துள்ளது.

இலங்கை மக்களுக்கு  உதவும் வகையில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் பெற்றோல் புதன்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவிடமிருந்து சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டொன் எரிபொருள்  கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply