மருத்துகளுக்கு விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மருந்து பொருட்களுக்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதன் தலைவர் சந்திக்க கனேகந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளை பதுக்குவதன் ஊடாக செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இலாபம் ஈட்ட முடியாது. சட்டத்தின் அடிப்படையில், விலை சூத்திரம் ஒன்று இருக்க வேண்டும்.

எனினும், நாட்டில் தற்போது வரையில் விலை சூத்திரம் ஒன்று நடைமுறையில் இல்லை.

எனவே அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் விலை சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் பட்சத்தில் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply