கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

<!–

கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படாது – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் – Athavan News

அவசர கணினி பராமரிப்பு காரணமாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உட்பட அனைத்து கிளை அலுவலகங்களிலும் இன்று (வியாழக்கிழமை) ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய சேவைகள் நண்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்படும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், விமான நிலைய நடவடிக்கைகள் எவ்வித பிரச்சினையும் இன்றி தொடரும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது


Leave a Reply