
கொரோனாத் தொற்றால் முல்லைத்தீவில் ஒருவர் சாவு!
கொரோனாத் தொற்றால்,முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொரோனா நோய் அறிகுறிகளுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பயனளிக்காது அன்றையதினமே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் கொரோனாத்தொற்றால் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இரணைப்பாலை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 80 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதுமட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் கடந்த 20ஆம் திகதி சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நபரும் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.





