
பாராளுமன்றமானது எதிர்வரும் 17ம் திகதி வரை ஒத்திவைப்பதாக பாராளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன நேற்று மாலை அறிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியிலும் பாராளுமன்ற வளாகத்திலும் நேற்றையதினம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற அமர்வு நேற்று நடைபெற்ற வேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை உடனடியாக சபைக்கு கொண்டுவருமாறு எதிர்க்கட்சிகளால் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த நிலையில் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறான நிலையில், பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை விடுத்தார்.

