கொரோனாவால் மேலும் 79 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 159 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 60 வயதுக்கு குறைவான 22 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்துஇ நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் ஆயிரத்து 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்து 531ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 4 இலட்சத்து 53 ஆயிரத்து 689 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 233 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply