இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன

இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய  நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு மகத்தான சாதனை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருவதாகவும் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, தற்போதிருக்கும் நிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் வகையில், வரும் சில வாரங்களில் பொறுப்புடன் இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply