நாடு நவம்பர் மாதம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு _ சன்ன ஜயசுமண

இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஒரு மகத்தான சாதனை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சமூகத்தில் வைரஸ் பரவுவது குறைந்து வருவதாகவும் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

எனவே, தற்போதிருக்கும் நிலையை பராமரிப்பது மிகவும் முக்கியம்.

மேலும், நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு வரும் வகையில், வரும் சில வாரங்களில் பொறுப்புடன் இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார்

Leave a Reply