வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி தொண்டமனாறு நன்னீரேரியில் ஆணொருவரின் சடலம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொண்டமனாறு நன்னீரேரி பகுதியில் ஆணொருவர் சடலமாக மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதையடுத்து, குறித்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply